பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பாஜக நிர்வாகியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2021-07-13 15:00 GMT

பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறை அருகே கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்த பாஜக ஒன்றிய பிரமுகர் மகாலிங்கம்(60). இவர் ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 மற்றும் 7 வயது சிறுமிகள் உள்பட சில சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக  புகார் எழுந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் இச்சையை தூண்டுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மகாலிங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட பாஜக ஒன்றிய பிரமுகர் மகாலிங்கத்தை கண்டித்து, மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மாதர்சங்கம், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிங்காரவேலன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக பிரமுகரை கண்டித்து முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News