முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
ராம நவமியையொட்டி குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பீகார், கோவா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட ராம நவமி ஊர்வலங்களின் போது முஸ்லிம்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் ஹரித்வாரிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் இந்துத்துவ நிகழ்ச்சிகளில் இனப்படுகொலைக்கான அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் மயிலாடுதுறையில் தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளர் முஹம்மது பைசல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர் நவாஸ் கான், எஸ்.டி.பி.ஐ. சாகுல் ஹமீது , திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.