சிறையிலுள்ள ஏழு தமிழர், இஸ்லாமியர்கள், அரசியல் கைதிகள் விடுதலை செய்ய கோரிக்கை
மயிலாடுதுறையில் மனித உரிமை மாநாட்டில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் நிர்வாகிகள் பங்கேற்பு
நீண்டகால சிறையாவாசிகளான ஏழு தமிழர், இஸ்லாமிய சிறையாளிகள், அரசியல் சிறையாளிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் சார்பில் மயிலாடுதுறையில் மனித உரிமை மாநாடு நடைபெற்றது.
ராஜீவ்காந்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, அக்கொலையில் தொடர்பு இல்லாத பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்கள் மற்றும் நீண்டகால சிறைவாசிகளான இஸ்லாமியர்கள் மற்றும் அரசியல் சிறையாளிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் சார்பில் மனித உரிமை மாநாடு நடைபெற்றது.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்மண் தன்னுரிமை இயக்க நெறியாளருமான பேராசிரியர் த.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக மக்கள் முன்னணி பொழிலன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி குடந்தை அரசன், மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.