18 நாட்களுக்கு பிறகு பிடிப்பட்ட முதலை: பாதுகாப்பாக ஆற்றில் விட்ட வனத்துறையினர்

Crocodile caught in Foresters safely released river- மயிலாடுதுறை அருகே வரதம்பட்டு கிராமத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த முதலை 18 நாட்களுக்குப் பிறகு பிடிபட்டது.

Update: 2022-05-30 14:07 GMT

Crocodile caught in Foresters safely released river -மயிலாடுதுறை அருகே வரதம்பட்டு கிராமத்தில் குளத்தில் புகுந்து மக்களை அச்சுறுத்திவந்த முதலை 18 நாட்களுக்குப் பிறகு பிடிபட்டது. வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு அணைக்கரை ஆற்றில் விட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வரதம்பட்டு கிராமத்தில் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் ஓமக்குளம் உள்ளது. கடந்த 12-ஆம் தேதி முதலை ஒன்று பழவாற்றின் வழியாக வந்து இந்த குளத்தில் புகுந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மயிலாடுதுறை வட்டாட்சியர் மகேந்திரன், சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் ஆகியோர் ஓமக்குளத்திற்கு சென்று, மூன்று இடங்களில் பள்ளம் தோண்டி, கோழி இறைச்சியை வைத்தும், மீன் வலைகளை விரித்தும் முதலையை பிடிப்பதற்கு பொறிவைத்தனர். 18 நாட்களை கடந்த நிலையில் இன்று காலை அந்த முதலை வலையில் சிக்கி பிடிபட்டது.

Crocodile caught in Foresters safely released river

இதைக்கண்ட கிராமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையிலான வனத்துறையினர் ஓமக்குளத்திற்கு சென்று பார்த்தபோது, 12 கிலோ எடைகொண்ட 2 வயது பெண் முதலை சிக்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வனத்துறையினர் அந்த முதலையை பாதுகாப்பாக மீட்டு, அணைக்கரை ஆற்றுக்கு கொண்டு சென்று அதனை பாதுகாப்பாக ஆற்றில் விட்டனர். 18 நாட்களுக்குப் பிறகு முதலை பிடிப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News