நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்: எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்பு
மயிலாடுதுறை, எடுத்துக்கட்டி ஊராட்சியில் பொறையார் டிபிஎம்எல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எடுத்துகட்டு சாத்தனூரில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் பைலட் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் அவர் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் மாலிக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எம்.சித்திக், தரங்கை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் பாரி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.