மயிலாடுதுறை மாவட்டத்தில் 42 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 42 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

Update: 2022-01-03 16:13 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 73சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது.மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் ஒமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கும் கோவாக்ஸின் தடுப்பூசி பணி இன்று மாநிலம் முழுவதும் துவக்கப்பட்டுள்ளது.

தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் பகுதியில் சம்பந்தர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி பணி போடும் பணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா துவக்கி வைத்தார். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மற்றும் சுகாதாரத் துறையில் கலந்து கொண்டனர்.

கொரோனா குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் முழுமையாக அறிந்து பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறி அனைவரும்தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்கம் ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 வயதிலிருந்து 18 வயதிற்கு உட்பட்டோர் 42 ஆயிரம் பேர் உள்ளனர் இதில் 35 ஆயிரம்பேர் பள்ளி மாணவ மாணவிகளாவர்.

Tags:    

Similar News