செம்பனார்கோவில் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்:எம்.எல்.ஏ. ஆய்வு

செம்பனார் கோவில் ஒன்றியத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.;

Update: 2021-10-10 11:28 GMT
செம்பனார் கோவில் ஒன்றியத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோவில் ஒன்றியம் . ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு பார்வையிட்டார்.

இந்த முகாமில் பொதுமக்கள் சுமார் 1000 க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு பயனடைந்தனர்.இதில் நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஊராட்சி மன்றத்தலைவர் கலியபெருமாள், சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News