மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணி: தொடங்கி வைத்த கலெக்டர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2021-06-15 17:42 GMT

மயிலாடுதுறையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி,14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணியை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார். அருகில் எம்எல்ஏக்கள், எம்பி உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,72,018 குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவி தொகையின் இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடக்கி வைத்தார்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக தமிழக அரசு ரூ.4000 வழங்குவதாக அறிவித்து

முதல் தவணைத் தொகை ரூ.2000 அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிலையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி இரண்டாவது தவணை ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்களை வழங்கி நிகழ்ச்சியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ராமலிங்கம், எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News