மயிலாடுதுறையில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம்
மயிலாடுதுறையில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் பூம்புகார் எம்எல்ஏ துவங்கி வைத்தனர்
தமிழக அரசு இன்று முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை தொகை 2000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் கோமல் கிராமத்தில் உள்ள கூட்டுறவு அங்காடியில் கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூபாய் இரண்டாயிரத்தை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் வழங்கி தொடங்கி வைத்தனர்.
இதன்மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி தரங்கம்பாடி தாலுக்காக்களில் உள்ள 2 லட்சத்து 68 ஆயிரத்து 945 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பயனாளர்கள் அனைவரும் முகக் கவசங்கள் அணிந்து கொரோனா நிதி உதவி தொகையை பெற்று சென்றனர்.