மயிலாடுதுறை அருகே கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி: இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல் ஆய்வாளர் துவக்கி வைத்தார்.

Update: 2021-05-12 10:37 GMT

 உளுத்துக்குப்பை ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல் ஆய்வாளர் துவக்கி வைத்தார்.


மயிலாடுதுறையில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை ஒன்றியம் உளுத்துக்குப்பை ஊராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதையொட்டி, ஊராட்சி முழுவதும் பிளீச்சிங் பவுடர் போடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்து முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி முகக்கவசங்களை வழங்கி அதை அணிந்து செல்ல வலியுறுத்தினார்.

Tags:    

Similar News