36 வார்டுகளில் 15ல் தான் போட்டி: நகராட்சியை கைப்பற்றுவோம் என பாஜக நம்பிக்கை

36 வார்டுகள் உள்ள மயிலாடுதுறை நகராட்சியில் 15 இடங்களில் மட்டும் போட்டியிடும் பாஜக நகரமன்றத்தைக் கைப்பற்றுவோம் என கோயிலில் வழிபாடு

Update: 2022-02-10 09:42 GMT

கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு பிரசாரத்தை தொடங்கும் பாஜகவினர் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் மொத்தம் 211 பேர் போட்டியிடுகின்றனர். இதில் பாஜக 15 வார்டுகளில் மட்டும் போட்டியிடுகிறது.

இந்நிலையில், பாஜக வேட்பாளர்கள் மயிலாடுதுறை திருஇந்தளூரில் உள்ள பரிமள ரெங்கநாதர் கோயிலுக்கு தாமரைப்பூவுடன் வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர், மீன்கூடை சுமந்து தெருக்களில் மீன் வியாபாரம் செய்யும் மகளிருக்கு வரிவசூல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும், நகராட்சி ஒப்பந்தங்களில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும், வரி வருவாயை மட்டுமே நம்பியிருக்காமல், பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டு நகராட்சி வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை வெளியிட்டனர்.

மேலும், 36 வார்டுகள் உள்ள நகராட்சியில் 15 இடங்களில் மட்டுமே போட்டியிட்டாலும், நகரமன்ற தலைவர் பதவியை கண்டிப்பாக கைப்பற்றுவோம் என்று கூறி தாங்கள் வெற்றி பெறப்போவதை ஊருக்கு பறைசாற்றும் விதமாக பட்டாசு வெடித்து, பிரசாரத்துக்குப் புறப்பட்டனர்.

Tags:    

Similar News