தன்னிறைவு திட்டத்தில் பள்ளிவாசல் சுற்றுச்சுவர் திறந்து வைப்பு
மடப்புரம் ஊராட்சியில், ரூ 9.97 லட்சம் மதிப்பீட்டில், பள்ளிவாசல் சுற்றுச்சுவரை, பூம்புகார் எம்எல்ஏ திறந்து வைத்தார்.;
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம், மடப்புரம் ஊராட்சியில், தன்னிறைவை திட்டம் 2020 21 கீழ், பள்ளிவாசல் சுற்றுச்சுவர், 9.97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு, பள்ளிவாசல் சுற்றுச்சுவரில் அமைத்திருந்த கல்வெட்டை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, ஆர்.திருமலை கண்ணன், ஒன்றிய பொறியாளர் விஜயன், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜ்கண்ணன், சாந்தி வேல்முருகன், ஒப்பந்ததாரர் வனிதா ராஜ் கண்ணன் மற்றும் ஆக்கூர், மடப்புரம் ஊர் ஜமாத்தார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.