முழு ஊரடங்கு காரணமாக 100 ஆண்டுகள் பழமையான கருவாட்டு வாரச்சந்தை மூடல்

மயிலாடுதுறை அருகே முழு ஊரடங்கு காரணமாக 100 ஆண்டுகள் பழைமையான கருவாட்டு வாரச்சந்தை மூடப்பட்டது.

Update: 2022-01-09 06:00 GMT

முழு ஊரடங்கு காரணமாக மயிலாடுதுறை அருகே மூடப்பட்ட கருவாட்டு சந்தை.

மயிலாடுதுறை அருகே உள்ளது சித்தர்காடு. இக்கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் மட்டும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் கருவாடுகளும் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இவற்றை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் சென்று சில்லறை விற்பனையில் ஈடுபடுவர்.

கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நூற்றாண்டு பழமை வாய்ந்த சித்தர்காடு கருவாட்டு சந்தை மூடப்பட்டது. சந்தையில் உள்ள சொற்ப ஊழியர்கள் கருவாடுகளை காயவைத்தல், பராமரிப்பு பணி போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News