நிலஅபகரிப்பு செய்து கொலை மிரட்டல்விடுவதாக எஸ்.பி. அலுவலகத்தில் புகார்.

நிலஅபகரிப்பு செய்து கொலை மிரட்டல் விடுப்பதாக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-05-14 04:07 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இருதயராஜ்(55). இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவருக்கு சொந்தமான நிலத்தை அவரது சகோதரர் மரியதாஸ் பராமரித்து வந்துள்ளார். அவரது மறைவுக்குப் பிறகு அந்த நிலத்தை தரமறுத்து மரியதாஸின் மகன்கள் இருதயராஜூக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, இருதயராஜ் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், தனக்கு கொலை மிரட்டல் விடுத்த மரியதாஸின் மகன்கள் ஆரோக்கியதாஸ், ஜெரால்டு, லாரன்ஸ், பவுல்ராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, அபகரிக்கப்பட்ட தனது நிலத்தை மீட்டுத்தரக் கோரி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags:    

Similar News