மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டப்பணிகள் துவக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டப்பணிகளை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்.

Update: 2022-03-25 08:38 GMT

நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் அடையாள அட்டைகளை வழங்கினார்.

ஊராட்சிப் பகுதிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுத்தப்படுவதைப் போன்று பேரூராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக மாவட்டத்தில் ஒரு பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டு பணிகள் வழங்கப்படுகிறது.

அவ்வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல்மேடு பேரூராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு, ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் 3 நீர்நிலைகளில் தூர் வாரும் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து மணல்மேட்டில் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று, திட்டத்தை தொடங்கி வைத்து பேசி, பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News