குடியரசு தினம்: மயிலாடுதுறையில் கலெக்டர் தேசியக் கொடியை ஏற்றினார்
மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கில் கலெக்டர் லலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்;
73-வது குடியரசுதினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை சாய் விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் லலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறை ஆளிநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கமும், சான்றிதழும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.