மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 புதிய ஜீப்புகளுக்கான சாவியை வழங்கினார் கலெக்டர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 புதிய ஜீப்புகளுக்கான சாவியை ஜீப் ஓட்டுனர்களிடம் கலெக்டர் லலிதா வழங்கினார்.;

Update: 2022-04-26 08:10 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை ஓட்டுனர்களிடம் புதிய ஜீப்புகளுக்கான சாவியை கலெக்டர் லலிதா வழங்கினார்.

தமிழகத்தில் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவித்தபிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு ரூ.100 கோடி நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கினார், அதன் கட்டுமானப் பணிகளையும் முதல்வரே துவக்கிவைத்தார். தற்காலிகமாக இயங்கிவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறையினரின் செல்பாடுகளுக்காக ரூ.23 லட்சம் மதிப்பிலான 3 ஜீப்புக்களை தமிழக அரசு வழங்கியது. அந்த ஜீப்புக்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, ஊரக வளர்ச்சித்துறையினருக்காக ஜீப் ஓட்டுனர்களிடம் வாகன சாவியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News