மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தனது மகளுடன், மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு சென்று ஆங்கிலப்புத்தாண்டை கொண்டாடினார்

Update: 2022-01-01 11:45 GMT

மயிலாடுதுறை மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை மாவட்ட ஆட்சியர் கொண்டாடினார்.

மயிலாடுதுறை மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை மாவட்ட ஆட்சியர் கொண்டாடினார்.

மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் அன்பகம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி இயங்கி வருகிறது. இதில் மனவளர்ச்சி குன்றவர்கள், ஆதரவற்றவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். ஆங்கிலப்புத்தாண்டையொட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தனது மகளுடன், அன்பகம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுடன் கேக்வெட்டி புத்தாண்டை கொண்டாடினார்.  அங்குள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கேக் வழங்கினார். இதில் அன்பகம் தாளாளர் ஞானசம்பந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News