மயிலாடுதுறையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

மயிலாடுதுறையில் கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-13 15:48 GMT

மயிலாடுதுறை கோ ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனையை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தீபாவளியை முன்னிட்டு மயிலாடுதுறையில்   கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் கடலூர் மண்டலத்தின் கீழ் வரும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு ஒரு கோடியே 25 லட்சம் மற்றும் சீர்காழி விற்பனை நிலையத்திற்கு ரூபாய் 60 லட்சம் இந்த ஆண்டு விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மின் பட்டுப்புடவைகள், காஞ்சிபுரம் ,ஆரணி, திருபுவனம் பட்டு புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள்,  பல்வேறு பகுதிகளில் அவர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், போர்வைகள், பருத்தி சட்டைகள் தலையணை உறைகள்,நைட்டீஸ் உள்ளிட்ட ஏராளமான ஏற்றுமதி ரகங்கள் விற்பனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிகபட்சமாக 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பொதுமக்கள் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வழிவகை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்  லலிதா அப்போது  பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News