மயிலாடுதுறையில் சின்ன மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம்

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது

Update: 2022-04-25 07:39 GMT

சின்ன மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம் 

மயிலாடுதுறையை அடுத்த தைக்கால் தெருவில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 25 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 15ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை ஆகியவை நடைபெற்று வந்தது. இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

காவேரிக் கரையில் இருந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் , அலகு காவடி ஆகியவை ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தன. பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கு கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Tags:    

Similar News