மயிலாடுதுறை விவசாயிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி கலந்துரையாடல்
மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல் நடத்தினார்.;
மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தலில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற விழாவில் ஓராண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்ட பயனாளிகளிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சியில் கலந்துரையாடினார்.இதில் 350க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் , பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குமார் மற்றும் ஊழியர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய மின் இணைப்பு வழங்காத நிலையில் தற்போது பதவி ஏற்றுக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துரித நடவடிக்கை எடுத்து மின்னிணைப்பு வழங்கியதற்கு முதல்வருக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.