மயிலாடுதுறை தி.மு.க நிர்வாகிகளுடன் முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை
மயிலாடுதுறை தி.மு.க நிர்வாகிகளுடன் முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.;
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வெற்றி வியூகம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர்கள் உடன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு தமிழக முதல்வர் கூறிய அறிவுரைகளை கேட்டறிந்தனர்.