மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிய சி.டி ஸ்கேன் மையம் திறப்பு
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிய சி.டி ஸ்கேன் மையத்தை ராஜகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.;
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, 2 ஆண்டுகளுக்கு முன்னர் நாகை அரசு மருத்துவமனையில் இருந்த பழைய சி.டி ஸ்கேன் இயந்திரம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்நிலையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய சி.டி ஸ்கேன் இயந்திரம் இன்று பொருத்தப்பட்டது. தலைமை மருத்துவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பங்கேற்று புதிய சி.டி ஸ்கேன் மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில் மருத்துவர் வீரசோழன், தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.