மயிலாடுதுறையில் உரிய ஆவணங்களில் இன்றி இயக்கப்பட்ட கார் பறிமுதல்

மயிலாடுதுறையில் உரிய ஆவணங்களில் இன்றி இயக்கப்பட்ட காரை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-10-13 14:53 GMT

மயிலாடுதுறையில் பறிமுதல் செய்யப்பட்ட கார்.

மயிலாடுதுறை பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கார் வாடகைக்கு இயக்கப்பட்டு வருவதாக உரிமைக்குரல் ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன், பொருளாளர் சரவணகுருநாதன், இணை செயலாளர் பழனி ஆகியோர் சித்தர்க்காடு பகுதியில் கும்பகோணத்தில் இருந்து பயணியுடன் வந்த காரை வழிமறித்து டி போர்டு இல்லாமல் கார் வாடகைக்கு இயக்குவதாக கூறி பயணியுடன் காரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

காரின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது கார் எப்.சி., இன்சூரன்ஸ் எதுவும் இல்லாமலும் டி போர்டு காரை ஓன்போர்டு போன்று வெள்ளை நம்பர் பிளேட்டோடு இயங்கியது கண்டு பிடிக்கப்பட்டது. காரில் பயணம் செய்தவரிடம் விசாரணை செய்தபோது காரை வாடகைக்கு கும்பகோணம் எடுத்து சென்றதும் தெரியவந்தது.

அதனையடுத்து, அந்த பயணியை மாற்று வாகனத்தில் அனுப்பி வைத்துவிட்டு, மாப்படுகை முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த காரை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News