மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளரை கிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பழனிச்சாமிக்கு குத்தாலம், வானாதி, ராஜபுரம், கடலங்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பட்டாசு வெடித்து வீடு வீடாக ஆரத்தி எடுத்து சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த பகுதியில் உள்ள பிரதான தேவைகளான மாப்படுகை மேம்பாலம், அரசு தொழில் பயிற்சி பள்ளி போன்றவற்றிற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.இதில் பாமக மாநில இளைஞரணி துணை தலைவர் விமல், அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் வைத்தி, அதிமுக ஊராட்சி செயலாளர் மகேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.