11 ஆண்டுகள் ஓடாத பேருந்தை இயக்கினார் எம்.எல்.ஏ. நிவேதா எம். முருகன்
மயிலாடுதுறை அருகே 11 ஆண்டுகள் ஓடாத பேருந்தை இயக்கினார் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. தற்போது மீண்டும் இயக்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு வந்த திருவிடைகழி முதல் மயிலாடுதுறை வரை செல்லும் A 31 என்ற நகர பேருந்து, சுமார் 11 ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்த மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை இந்த வழித்தடத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியும், இந்த வழித்தடத்தில் பேருந்து இல்லாமல் கல்லூரி மாணவிகள், பெண்கள் சிரமப்படுவதாலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இயக்கப்படாமல் இருந்த பேருந்தினை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார் .மேலும் அவர் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்தை இயக்கி சென்றார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், மங்கை சங்கர், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்