தேர்தல் வெற்றி: மயிலாடுதுறையில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ஐந்து மாநில தேர்தல் பெரும்பான்மை வெற்றியை, மயிலாடுதுறையில் பாஜகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.;
மயிலாடுதுறையில், தேர்தல் வெற்றியை அடுத்து இனிப்பு வழங்கிய பாஜகவினர்
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் தவிர்த்த பிற மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி முன்னணியில் உள்ளது.
பாஜகவின் இந்த வெற்றியை மயிலாடுதுறையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் அக்கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.