தமிழகத்தில் ஆளுநர் மூலம் இரட்டை ஆட்சியை திணிக்கும் பாஜக : பொன்குமார் பேட்டி.

தமிழகத்தில் ஆளுநர் மூலமாக இரட்டை ஆட்சியை திணிக்கும் பாஜக ஆட்சியை கண்டித்து கட்டிட தொழிலாளர் சங்க ஆர்ப்பாட்டம்;

Update: 2022-04-26 12:30 GMT

மயிலாடுதுறையில் பேட்டியளித்த கட்டிடத்தொழிலாளர் நலவாரியத்தலைவர் பொன்.குமார்

தமிழகத்தில் ஆளுநர் மூலமாக இரட்டை ஆட்சியை திணிக்கும்  பாஜக  ஆட்சியை கண்டித்து நடைபெற்ற  ஆர்பாட்டத்தில் கட்டிட தொழிலாளர் சங்க வாரிய தலைவர் பொன்குமார்  பங்கேற்று பேசினார்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் தமிழக கட்டிட தொழிலாளர், மற்றும், அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, அமைப்புசாரா தொழிலாளர் சங்க பிரதிநிதி ஜெக.முருகன் தலைமை வகித்தார். அந்த பொதுக்குழுவில் திமுக மாநில தேர்தல் பணிக்குழு. செயலாளர் குத்தாலம் கல்யானம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

மாவட்ட பொதுக்குழுவில் கலந்துகொண்ட தமிழக கட்டிட தொழிலாளர் சங்க தலைவரும்,, கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவருமான பொன்குமார் கலந்துகொண்டு  பின் ஆளுநரை கண்டித்து நடைபெற்ற  ஆர்பாட்டத்தில் பங்கேற்றார்.  பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசு தீர்மானம் போடுவதை டெல்லிக்கு அனுப்பும் தபால்காரர் வேலைதான் ஆளுநருக்கு என்றும்  அதை கிடப்பில் போடும், ஆளுநர் தமிழகத்திற்கு தேவை இல்லை என்றும், மேலும், பல்கலைகழக. துணைவேந்தர் நியமனத்தில் பாஜகவினரை நியமனம் செய்வதை கண்டித்தும், மத்திய அரசு, ஆளுநர் மூலமாக தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடத்த முயற்சிப்பதை மாற்றிகொள்ள வேண்டும் என்றார் அவர்.

Tags:    

Similar News