மயிலாடுதுறையில் பள்ளி அருகே மதுக்கடை: அகற்றக்கோரி பாஜகவினர் போராட்டம்
மயிலாடுதுறையில், பள்ளி, ஆலயங்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பாஜகவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.;
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டாச்சியர் அலுவலகம் எதிரே, பாஜகவினர் இன்று உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மகாதானத் தெருவில் பள்ளிகளும், ஆலயங்களும் இருக்கும் இடத்திற்கு அருகே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதனால் பொதுமக்களூம், மாணவ, மாணவிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து, பலமுறை பாஜகவினர் அரசு அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்ததால் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதத்திற்கு பாஜக மாநில ஓபிசி அணி துணைத்தலைவர் அகோரம் தலைமை வகித்தார். இதில், மாநில பாஜக செயலாளர் தங்க.வரதராஜன் உள்ளிட்ட 100க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.