நான்கு மாநில தேர்தல் வெற்றியை சேவை வாரமாகக் கொண்டாடும் பாஜகவினர்

மயிலாடுதுறையில் பாஜகவினர் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உணவளித்து, மரக்கன்றுகளை நட்டுவைத்து கொண்டாடினர்;

Update: 2022-03-12 15:30 GMT

மயிலாடுதுறையில் நான்கு மாநில தேர்தல் வெற்றியை சேவை வாரமாகக் கொண்டாடும் பாஜகவினர்

மயிலாடுதுறையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உணவளித்து, மரக்கன்றுகளை நட்டுவைத்து கொண்டாடினர்.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களில் பஞ்சாப் தவிர்த்த பிற மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்பேரில் 4 மாநில வெற்றியை பாஜகவினர் சேவை வாரமாகக் கொண்டாடி வருகின்றனர்.

அவ்வகையில் மயிலாடுதுறையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் காப்பகமான அன்பகம் காப்பகத்தில் பாஜக மாவட்ட தலைவர் வெங்கடேசன், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், நகர தலைவர் மோடி.கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி பாஜகவின் வெற்றியை கொண்டாடினர். தொடர்ந்து, காப்பக வளாகத்தில் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில், திரளான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News