ரூ.3.50 கோடி மதிப்பில் தொற்றுநோய் சிகிச்சை மைய பூமி பூஜை: ஆட்சியர் துவக்கம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் தொற்றுநோய்களுக்கான சிகிச்சை மையம் கட்டுவதற்கான பூமிபூஜை.;

Update: 2022-04-06 12:04 GMT

மயிலாடுதுறை அரசுமருத்துவமனையில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் தொற்றுநோய்களுக்கான சிகிச்சை மையம் கட்டுவதற்கான பூமிபூஜையை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் பரவக்கூடிய தொற்றுநோய்களுக்கான சிகிச்சை மையம் கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை. மாவட்ட ஆட்சியர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை பெரியார் அரசினர் மருத்துவமனையில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் தொற்றுநோய்களுக்கான சிகிச்சை மையக் கட்டடம் அமையவுள்ளது. என்டிடி இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்pன் நிதி உதவியில் பூமி தன்னார்வ தொண்டு நிறுவனம் அமைக்கவுள்ள இந்த கட்டடத்துக்கான பூமிபூஜை மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பங்கேற்று அடிக்கல்நாட்டி வைத்து பணிகளைத் துவக்கி வைத்தார்.

இதில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார், சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குநர் சிவக்குமார், தலைமை மருத்துவர் ராஜசேகர் மற்றும் என்டிடி நிறுவன துணைத்தலைவர் முரளி, பூமி தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பிரகலாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News