மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை: ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவிப்பு.

Update: 2021-12-31 14:23 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை - ஆட்சியர் லலிதா அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்து உள்ளார். புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் மக்கள் வெளியே ஒன்று கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் புத்தாண்டு வழிபாட்டிற்காக கூடும்பட்சத்தில், கொரோனா தொற்று, ஒமைக்ரான் பரவும் அபாயம் உள்ளதால், வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் கோவிட்-19 கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். மாவட்டத்தின் எந்த ஒரு கடற்கரை பகுதிகளிலும் புத்தாண்டு தினத்தன்று பொதுமக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி ஆகிய கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் புத்தாண்டு தினத்தன்று கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் அரங்குகளில் கேளிக்கைமற்றும் இசைநிகழ்ச்சிகளுக்கு 31.12.2021 மற்றும் 01.01.2022 ஆகிய இரு நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31 ஆம் தேதி இரவு பைக் ரேஸ் மற்றும் அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இரவு 11.00 மணி வரை மட்டும் உணவு விடுதிகள் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா, தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News