சீர்காழியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

சீர்காழியில் சைக்கிள் ஓட்டுவதின் நன்மை குறித்து காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

Update: 2022-03-05 07:55 GMT

சட்டநாதபுரம் கைகாட்டி ரவுண்டானா பகுதியில் டிஎஸ்பி லாமேக் தலைமையில் இன்று சைக்கிள் பேரணி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரம் கைகாட்டி ரவுண்டானா பகுதியில்  டிஎஸ்பி லாமேக் தலைமையில் இன்று சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் சைக்கிள் ஓட்டுவதின் அவசியம் குறித்தும், அதனால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.

பேரணியை பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜ்கமல் கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் பெஸ்ட் மெட்ரிக் பள்ளியின் மாணவர்கள் 80க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சட்டநாதபுரம் கைகாட்டி பகுதியில் இருந்து சைக்கிளில் சீர்காழி புதிய பேருந்து நிலையம் , கடைவீதி, பழைய பேருந்து நிலையம், கச்சேரி ரோடு வழியாக மீண்டும் சட்டநாதபுரம் கைகாட்டி பகுதியை வந்தடைந்தனர்.

இதில் சீர்காழி டிஎஸ்பி லாமேக் மற்றும் சீர்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News