மயிலாடுதுறையில் பட்டா வழங்காததால் குடியுரிமை ஆவணங்களை ஒப்படைக்க முயற்சி

மயிலாடுதுறையில் பட்டா வழங்காததால் தம்பதியினர் குடியுரிமை ஆவணங்களை ஒப்படைக்க முயற்சித்தனர்.

Update: 2022-02-01 01:54 GMT

மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் குடியுரிமை ஆவணங்களை ஒப்படைக்க முயன்ற தம்பதியினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பாதரக்குடி கிராமத்தில் உள்ள மேலத் தெருவில் வசித்து வருபவர் மணிமேகலை. இவர் தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் 50 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறார். இந்த நிலையில் தான் இருந்துவரும் இடத்திற்கு பட்டாவிற்காக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளதாக கூறப்படுகின்றது.பல முறை இதுதொடர்பாக அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துள்ளதாகவும் ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பட்டா கிடைக்காமல் இருந்துள்ளதாகவும் . தொடர்ந்து அதிகாரிகள் அலைக்கழித்ததால் நேற்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மணிமேகலை தனது இரண்டு மகன் மற்றும் மருமகள் உடன் இணைந்து அரசு குடியுரிமை ஆவணங்களை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க முயன்றார்.

மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாசிடம் இதுதொடர்பாக மனு கொடுத்தார். பின்னர் குடும்ப அட்டை ,ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்க முயன்றார். அதனை வாங்க மறுத்து வருவாய் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் உறுதியளித்தார்.

Tags:    

Similar News