அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக மயிலாடுதுறையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை தொடர்பாக மயிலாடுதுறையில் பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-01-21 14:08 GMT

மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தூய இருதய பள்ளியில் படித்த அரியலூரை சேர்ந்த லாவண்யா என்ற 17 வயது மாணவியை தற்கொலைக்குத் தூண்டிய பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்தும், இவ்விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பா.ஜ.க. மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன், நகர தலைவர் மோடி.கண்ணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது கட்டாய மதமாற்றத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News