அரசூர் ஊராட்சி மன்ற கட்டிடம் : நிவேதா முருகன் எம்எல்ஏ திறந்தார்
மயிலாடுதுறை மாவட்டம் அரசூர் ஊராட்சி மன்றத்தின் புதிய கட்டிடத்தை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த அரசூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடத்தை நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மேலும் அமுமுக முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் பபுதிதாக திமுகவில் இணைந்தனர் இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் நாகை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா.அலெக்சாண்டர் ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார்,பிரபாகரன், சசிகுமார் அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் இமயவேல் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்