மயிலாடுதுறையில் மோடிக்கு எதிரான பிரச்சாரம் கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் மோடிக்கு எதிரான தொடர் பிரச்சாரத்தை கண்டித்து பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2021-10-24 05:12 GMT

மயிலாடுதுறையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டித்து கடந்தவாரம் மயிலாடுதுறையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பிரதமர் நரேந்திர மோடியின் உருவபொம்மையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொளுத்த முயன்றதற்கு கண்டனம் தெரிவித்தும், பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசையும் இழிவுபடுத்தி தொடர்ச்சியாக பேசிவருவதைக் கண்டித்தும் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க. மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவிசேதுராமன், நகரத் தலைவர் மோடி.கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கம்யூனிஸ்ட் கட்சியினரைக் கண்டித்து பேசி, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News