அம்பேத்கர் உருவ படத்தை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் அம்பேத்கர் உருவ படத்தை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.;
மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தியில் நேற்று அம்பேத்கர் படம் வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கலவரம் ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்ககோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ படத்தை அவமதித்தவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி கண்டன முழக்கமிட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.