பூம்புகார் தொகுதி எம்எல்ஏ தலைமையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமையில் மாற்றுகட்சியை சேர்ந்தவர்கள் 1000ம் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்;

Update: 2022-03-16 18:00 GMT

மயிலாடுதுறையில் பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமையில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள்  திமுகவில் இணைந்தனர்.

மயிலாடுதுறையில் பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமையில் மாற்றுகட்சியை சேர்ந்தவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறை தெற்கு ஓன்றியம் சார்பில் உளுத்துகுப்பை ஊராட்சியில் திமுகவில் மாற்று கட்சியிலிருந்து திமுகவில்  இணையும் விழா நடைபெற்றது. நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் தொகுதி எம்எல்ஏவுமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்று கட்சியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைத்துக் கொண்டனர். உளுத்துகுப்பை ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமமுக ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.எஸ்.ரியாஸ் உள்ளிட்ட மாற்றுகட்சி சேர்ந்தவர்கள் மயிலாடுதுறை கால்டக்சி பகுதியிலிருந்து இருசக்க வாகனத்தில் 2கிலோ மீட்டர் தொலைவுக்கு  ஊர்வலமாகச் சென்று உளுத்துகுப்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி தங்களை திமுக கட்சியில் இணைத்துக் கொண்டனர்.  பட்டாசுகள் வெடித்தும் பேரணியாக சென்றனர். இந்நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இமயநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News