மயிலாடுதுறையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தண்டனை முடிந்த கைதிகளை விடுதலை செய்யக்கோரி மயிலாடுதுறையில் இஸ்லாமிய அமைப்புகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் சின்னக்கடை வீதியில் மயிலாடுதுறை மாவட்ட வட்டார ஜமாஅத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயுள் சிறைவாசிகள் தண்டனை காலம் முடிவடைந்தும் விடுதலை செய்யப்படாத சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழக அரசை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் சாதிக் தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தண்டனை காலம் முடிவடைந்தும் சிறையில் உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில் முன்னாள் சிறைவாசி கோவை நாசர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள். 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.