சீர்காழியில் வலிமை படம் வௌியீட்டையொட்டி அஜீத் ரசிகர்கள் கொண்டாட்டம்

சீர்காழியில் வலிமை படம் வௌியீட்டையொட்டி அஜீத் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாட்டம் போட்டனர்.;

Update: 2022-02-24 08:11 GMT

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் இன்று சீர்காழியில் இரண்டு திரை அங்குகளில் திரையிடப்பட்டது. இதனையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எதிர்பார்ப்பில் இருந்த அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். திரைப்படம் வெளியான திரையரங்கு முன்பு பட்டாசு வெடித்து குத்தாட்டம் போட்டு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அஜித் படத்திற்கு  திருஷ்டி சுற்றி பூசனிக்காய் உடைத்து உற்சாகக் குரலெழுப்பி நடனமாடினர். கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News