மயிலாடுதுறையில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்

மயிலாடுதுறையில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-12-17 17:13 GMT

மயிலாடுதுறையில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தி.மு.க. அரசை கண்டித்து மயிலாடுதுறை சின்னகடைவீதியில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசுகளின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும், பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை அளிக்க வேண்டும், அம்மா மினி கிளினிக்குகளை தி.மு.க. அரசு மூடுவதை கண்டித்தும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தும், தி.மு.க. அரசு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

Tags:    

Similar News