சொத்து வரி உயர்வைக் கண்டித்து மயிலாடுதுறையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வைக் கண்டித்து மயிலாடுதுறையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.;
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாரதி, ராதாகிருஷ்ணன், சக்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.