மயிலாடுதுறையில் அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
மயிலாடுதுறையில் அ.தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மயிலாடுதுறையில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பாரதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அ.தி.மு..க.வினர் அ.தி.மு.க நகர அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்..