வேளாண் சட்டங்கள் வாபஸ்: மயிலாடுதுறையில் விவசாயிகள் கொண்டாட்டம்
3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதை மயிலாடுதுறையில் விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.;
3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வந்த நிலையில் அச்சட்டத்தை திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார். தமிழக முதல்வரின் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதி மயிலாடுதுறையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.