தரங்கம்பாடி: அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு மாவட்ட செயலாளர் வாக்கு சேகரிப்பு

தரங்கம்பாடி பேரூராட்சி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் வாக்கு சேகரித்தார்.;

Update: 2022-02-16 10:55 GMT

தரங்கம்பாடி பேரூராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பிரச்சாரம் செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி தேர்தலில் 3 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள 15 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 2,6,11,12 ஆகிய 4வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மயிலாடுதுறை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தனது ஆதரவாளர்கள் புடைசூழ வேட்பாளருடன் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அவருடன் வந்த ஆதரவாளர்கள் போடுங்கம்மா ஓட்டு இரட்டை இலை சின்னத்திற்கு பார்த்து என் கோஷம் எழுப்பியவாறு சென்றனர்.  இதில் தரங்கம்பாடி பேரூராட்சி செயலாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜனார்த்தனன், வி.ஜி.கண்ணன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News