பொறையாரில் திமுகவில் இணைந்த பாஜக, அதிமுக கட்சியினர்

பொறையாரில் பாஜக, அதிமுக கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்;

Update: 2022-01-13 14:13 GMT

பொறையாரில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி தரங்கை பேரூராட்சிக்குட்பட்ட பொறையார், ஒழுகை மேட்டுப்பாளையம் பகுதிகளை சார்ந்த பாஜக மற்றும் அதிமுக பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பாஜக முன்னாள் நகர பொது செயலாளர் ஜோன்ஸ் செல்லப்பா தலைமையில் பொறையார் கலைஞர் அரங்கத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்

இதில், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், தரங்கை பேரூர் செயலாளர் வெற்றிவேல், அவைத்தலைவர் கந்தசாமி மற்றும் திமுக பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News