சீர்காழி அருகே கருங்கல் ஜல்லி ஏற்றிய லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

சீர்காழி அருகே புறவழிச்சாலையில் கருங்கல் ஜல்லி ஏற்றிய லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.;

Update: 2022-04-26 16:19 GMT
சீர்காழி அருகே புறவழிச்சாலையில் ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச் சாலை வழியாக திண்டிவனம் பகுதியில் இருந்து கருங்கல் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி லாரி சென்றது. இந்த லாரியை காரைக்கால் பகுதியை சேர்ந்த வேலு பிரபாகரன் (22 )என்பவர் ஓட்டிச் சென்றார்.இந்த லாரி சீர்காழி புறவழிச்சாலையில் பனமங்கலம் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வாய்க்கால் கட்டையில் மோதி வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்தது.

லாரி கவிழ்ந்த விபத்தில் லாரியில் இருந்த கருங்கல் ஜல்லிகள் சுமார் 50 அடி தூரத்திற்கு பலத்த சப்தத்துடன் சிதறி கொட்டியது. சப்தம் கேட்டு விரைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் ஓட்டுனரை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.இந்த விபத்தில் ஓட்டுனர் வேலுபிரபாகரன் படுகாயம் ஏற்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்து விபத்து குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News