மயிலாடுதுறை அருகே சுதந்திர தின 75-வது ஆண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மயிலாடுதுறை அருகே ஆக்கூர் ஊராட்சியில் சுதந்திர தின 75-வது ஆண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தஞ்சாவூர் மக்கள் தொடர்பு களஅலுவலகம் சார்பாக 75வது சுதந்திர தின விழா கொண்டாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை மயிலாடுதுறை மாவட்ட திட்ட இயக்குனர் முருகண்ணன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் கோவிட்நோய் தடுப்பூசி, தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் திறந்தவெளி மலம் கழித்தல் தடுக்கும் வகையில் மத்திய அரசின் கழிப்பிட வசதி திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், மற்றும் பணமில்லா பரிவர்த்தனை செய்ய அனைவரும் வங்கி கணக்கு தொடங்குதல், ஆயுள் காப்பீடு திட்டம், முன்னோடி வங்கியில் கடன் வசதி பெறுதல், மண்வள அட்டை மனித உரிமைகள் தினம் தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு பாண்டிச்சேரி மண்டல மக்கள் தொடர்பு இயக்குநர் காமராஜ், இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி பொதுமேலாளர் வெங்கடேஷ், உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சியின் வாயிலாக கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.