மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளில் 73 -வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளில் 73 -வது குடியரசு தின விழா கொண்டாட்டம் மிக சிறப்பாக நடந்தது.

Update: 2022-01-26 10:44 GMT

மயிலாடுதுறை தனியார் பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 73 வது குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் ஒன்றிய அலுவலக வளாகத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி அரசு அலுவலர்கள் மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து செம்பனார்கோவிலில் உள்ள பூம்புகார் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.

மேலும் அவர் தரங்கம்பாடி அடுத்து பொறையாறு சர்மிளா காடஸ் தனியார் மேல்நிலைப்பள்ளி, செம்பனார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சிகளில், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஒன்றிய துணை பெருந்தலைவர் மைனர் பாஸ்கர் தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர், மற்றும் கழகப்பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News